மதுரையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் , ராமநாதபுரம் சிவகங்கை , திருச்சி , கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் நிறுவனத்தலைவர் சகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.