அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் உயர்நீதிமன்ற அருகே உள்ள மீனாட்சிநகர், அப்துல்கலாம் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம்போல தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதோடு பல்வேறு தொற்று நோய்கள் உருவாகி வருவதாகவும் இந்த பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் பல நாட்களாக துார்வாரப்படாததாலும் குடிநீர் போர் நீருற்றுகளில் கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மாவட்ட செயலாளர் கல்லாணை தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அப்போது கிழக்கு ஒன்றிய அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் த. வெ. கவினர் அளித்த இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை கால்வாயை தூர்வார உத்தரவிட்டார்.
இதனையடுத்து 24 மணி நேரத்தில் ஆட்சியரின் அதிரடியான நடவடிக்கையை தொடர்ந்து மீனாட்சிநகர், அப்துல்கலாம் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து ACTION - REACTION என தவெக மனு அளித்தது குறித்தும், நடவடிக்கை எடுத்தது குறித்தும் தவெகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளனர்.