மதுரை கோரிப்பாளையத்தில் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மக்கள் போராட்டத்தால் வீழ்ந்த பாசிச மோடி எனும் தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பிரச்சார கூட்டத்தில் பேசினர்.
பாஜகவிற்கு எதிரான பல்வேறு அமைப்பினர் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.