சமூக வலைதளங்களை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்

69பார்த்தது
சமூக வலைதளங்களை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகளின் துவக்க விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், துணைத்தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். டீன் அழகேசன் வரவேற்றார்.

சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு துவக்கி வைத்தார். மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், சாலைபாதுகாப்பு, போதை பழக்கத்தில் மீட்பு கிளப்களை துவக்கி வைத்து பேசியதாவது: நீங்கள் பட்டதாரி என்பதைவிட, எப்படி நடக்கிறோம், எப்படி வாய்ப்புகளை பயன்படுத்துறோம், எப்படி முன்னேறுகிறோம் என்பதே முக்கியம். இளைஞர் சமுதாயம் சில தீய பழக்கவழக்கங்களால் பாதிக்கிறது. இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய சவால், அலைபேசி, சமூக வலைதளங்கள்தான்.

அவற்றை நீங்கள் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்தாண்டு போதை பொருள் சம்பந்தமாக 122 வழக்குகள் பதியப்பட்டு, 14 வாகனங்கள் பறிமுதல், ரூ. 14 லட்சம் மதிப்புள்ளபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, 126 கடைகள் மூடப்பட்டுள்ளன, என்றார்.

தொடர்புடைய செய்தி