மதுரை ராஜா மில் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். கூடல் நகரை சேர்ந்த உதயகுமார் (23), ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த முகமது இஸ்மத் (20) ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
இதை அடுத்து அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதை எடுத்து அவர்கள் இருவரையும் திலகர் திடல் போலீசார் கைது செய்தனர்.