ராம நவமி விழா.!!

81பார்த்தது
ராம நவமி விழா.!!
மதுரையில் ராம நவமி விழா


மதுரை பகுதி கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

மதுரை நகரில் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயிலில், ராமநவமியையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர், பூதேவி, தேவி ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதேபோல், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயத்தில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், ராமநவமியை ஒட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கோயில் நிர்வாக சார்பில் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ராம நவமியை, ஒட்டி ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சணமும், அர்ச்சணைகள், தீபாராதனைகள் நடைபெறும்.
பக்தர்கள் பலர் ராமர், சீதா தேவியை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி