மதுரை நகரில் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 6) மாலையில் மழை பெய்தது.
வங்ககடலில் நிலவும் கீழ் அடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை நகரில் இன்றும் (ஜூன் 6) இடி மின்னலுடன் மழை பெய்தது. மழையானது காற்றுடன் மழை பெய்தது. நேற்று (ஜூன் 5) போலவே இன்றும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.