மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு 2024 - 2025 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பை மாநகராட்சி கல்வி பிரிவு நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாநகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு விரைந்து நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.