சிறுதானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சி

51பார்த்தது
மதுரை மத்திய சிறையில்- சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா


மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சாஜர் ஹெல்த் எஜுகேஷன் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மதுரை மூலம் உதவித்தொகையுடன் 30 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது. இன்று அதன் நிறைவு நாளில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில்
மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் சாஜர் ஹெல்த் எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் , நபார்டு வங்கி மேலாளர் சக்தி பாலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி