இமானுவேல் சேகரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த வருவார்கள். அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக அந்தந்த காவல் நிலையங்களில் சிறப்பு அனுமதி பெற்று அடையாள அட்டையுடன் நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என காவல்துறை சார்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறப்பு அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் மட்டுமே மதுரை எல்லையில் உள்ள சிலைமான் சோதனைச் சாவடி கடந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 1700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.