தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறுமிக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநில அளவில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றம் சார்பாக, பங்கேற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிறுமி ஹர்ஷினி யை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ. கா. ப. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள். நிகழ்வில் தல்லாகுளம் போலீசார் மற்றும் தடகள போட்டியின் பயிற்சியாளர் கலந்து கொண்டனர்.