லண்டன் கணவருடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

80பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண் உசிலம்பட்டி அடுத்த நக்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்த லண்டனில் வசித்துவரும் கவிராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி கடந்தாண்டு அக்டோபர் 10ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்யப்பட்டு அதன் பின்னர்
20- 3- 2024 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மஹாலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாகவும்,
தன்னுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக 10 லட்ச ரூபாய் உனது தந்தையிடம் இருந்து வாங்கி தர வேண்டும். அப்படி செய்தால் தான் நான் உன்னை லண்டனுக்கு அழைத்து சென்று வாழ்வேன் என கூறி தன்னை அடித்ததாகவும், திருமணமாகி 18 ஆவது நாளிலேயே தன்னிடம் சண்டையிட்டு தனது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவரின் குடும்பத்தினர் லண்டன் சென்றுவிட்டார்கள் என கூறியும், அவர்களை தன்னால் தொடர்புகொள்ள இயலவில்லை என்பதால்
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தனது கணவரை அழைத்துவர வேண்டியும், தன்னை தனது கணவருடன் சேர்த்துவைக்க கோரியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இளம்பெண் காயத்ரி மனு அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி