மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 'டிஜிட்டல்' அமைப்பின் சார்பாக டிஜிட்டல் டெக்னாலஜி மாநாடு, கண்காட்சி அக். , 13, 14ல் நடக்கிறது. டிஜிட்டல் தலைவர் முத்து கூறியதாவது: ஆண்டுதோறும் டிஜிட்டல் சங்கமம் என்ற கருத்தரங்கை நடத்துகிறோம்.
இந்த ஆண்டு கண்காட்சியையும் சேர்த்து நடத்தவுள்ளோம். இதில் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள், அலைபேசி செயலிகள், சேவை இணையதளங்களை காட்சிப்படுத்தவிருக்கிறோம். காலை 9: 00 மணி முதல் மாலை 6: 00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். அக். , 13 கண்காட்சியை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் துவங்கி வைக்கிறார். அக். , 14 கருத்தரங்கில் சிறந்த தொழில் செய்வோருக்கு வைகை குழுமத் தலைவர் நீதிமோகன் விருது வழங்குகிறார், என்றனர்.