மதுரையில் நாம் தமிழர் கட்சி சீமான் பரபரப்பு பேட்டி

72பார்த்தது
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். அன்னபூர்ணா உரிமையாளர் நேரில் வரவழைத்து மிரட்டப்பட்டு உள்ளார். தொழில் நிறுவனத்தின் அதிபருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என தெரிந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு நாட்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநாட்டுக்கு அனுமதி பெற கால அவகாசம் வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது.

விஜய் அரசியலுக்கு புதிது, நான் கட்சி துவங்கிய போது பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் தற்போது தான் கட்சி துவங்கி உள்ளார். அவர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழகத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறியது, 7, 000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்ய போகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. அப்புறம் ஏன் தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை. 31 இலட்சம் அல்ல 3, 000 பேருக்கு வேலை கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? " என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி