நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது

6550பார்த்தது
நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது
மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வீட்டிற்கு அழைத்து தவறாக பழகி வீடியோகால் மூலமாக நிர்வாணமாக பேசவைத்து வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அருண்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என காதலித்த பெண் கேட்டதற்கு நிர்வாண வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான நிலையிலும் காதலித்த பெண்ணின் வீடியோவை காட்டி மிரட்டி தான் அழைக்கும் போதெல்லாம் தனியாக வர வேண்டும் என கூறி மிரட்டிய நிலையில் அண்ணாநகர் மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் கீழ் அருண்குமாரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி