மதுரையிலிருந்து நத்தத்திற்கு 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையின் தனிச்சிறப்பு, மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இது பறக்கும் சாலைப்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த பறக்கும் பாலத்தின் மேல் பகுதியில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் முறையாக எரியவில்லை என புகார் அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக பாலத்தை பராமரிக்காதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் செல்லக்கூடிய வாகன ஒட்டிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.