மதுரை மாநகர் ஆரப்பாளையம் செல்லக்கூடிய ராஜா மில் ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் காரில் சென்ற மூன்று பேர் இந்த மழை நீரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.