மதுரை மாநகர் திடீர் நகர் , மாசி வீதிகள், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி , தெற்குவாசல் , பழங்காநத்தம் , காளவாசல் , ஜெய்ஹிந்த்புரம் சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், முனிச்சாலை, தெப்பக்குளம், ஆனையூர் , வள்ளுவர் காலனி , செல்லூர் , SS காலனி, உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதன்காரணமாக மதுரை ரயில் நிலையம் , சிம்மக்கல் கோரிப்பாளையம் , ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவு நேரத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வானத்தில் மின்னல் வந்த போது பகல் போல வானம் காட்சியளித்தது.
செல்லூர் கண்மாய் , முடக்கத்தான் , ஆலங்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் மற்றும் கிருதுமா நதி கால்வாய் சிந்தாமணி கால்வாய், ஆகிய கால்வாய்கள் வழியாக மழைநீர் சென்று வரும் நிலையில் அடுத்தடுத்து கனமழை பெய்து வருவதால் கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.