வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த 'டானா புயல்' வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, மிகத்தீவிர புயலாக, இன்று (அக்., 25) காலை கரையைக் கடந்தது. தமிழகத்திலும் இன்று கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.