உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவல்துறை சார்பில் மகளிர் உதவி எண் 181 குறித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் மதுரை மாநகர காவல் கரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல்நிலையங்கள், ஆயுதப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவு காவல்துறையினரும் பணிபுரியும் மகளிர் காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி, மீனாட்சி கல்லூரி, லேடிடோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி உள்ளிட்ட 16 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஓட்டப்பந்தயத்தினை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனையடுத்து மகளிர் காவல்துறையினர், மாணவிகள் உற்சாகமாக மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி அய்யர்பங்களா சென்றடைந்து பின்னர் மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தனர்.
முன்னதாக ஆயுதப்படை மைதானத்தில் கல்லூரி மாணவிகளோடு இணைந்து மகளிர் காவல்துறையினர் உற்சாகமாக இசைக்கு ஏற்ப நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் 3 இடங்களை பிடித்த லேடிடோக் கல்லூரி மாணவிகள் ஐஸ்வர்யா, ரச்செல், ஷனா ஸ்டெல்லா ஆகிய மாணவிகளுக்கு கைதட்டி உற்சாகமாக வரவேற்று வாழ்த்த