இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று (மார்ச். 08) தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்கிறார். இதற்கு வேலியன்ட் என பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கிறார்கள், இதற்காக அவர் கடந்த 6ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார்.