மதுரை செல்லூர் கண்மாயில் பொதுப்பணித்துறை சார்பில் 4. 65 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்க்கு சுற்றி வேலி மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் நடைபாதை மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
தற்போது , 10- உயர மின் கம்பத்திற்கு அரை அடி கூட ஆழமிட்டு அடித்தளமி டாமல் அமைக்கப்பட்ட புதியதாக மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து உள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்விளக்கு இன்றி பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் புதிய அரசு பணிகள் மேற்கும் போது உறுதியானபடி பணிகளை அமைக்கவும் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.