மதுரையில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளர் மீது கொஞ்சம் நடவடிக்கை எடுங்கபாதிக்கப்பட்டவர் வீடியோ வெளியீடு
மதுரை மாவட்டம் பசுமலை பகுதி பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது,
இந்த உணவகத்திற்கு நிலையூர் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் உணவு வாங்க சென்றுள்ளார். , அப்போது உணவு பொருள் வாங்கிய பிறகு தனியார் குளிர்பான பாட்டில் வாங்கியபோது அந்த பாட்டிலில் விலை 40 ரூபாய் என போடப்பட்டிருந்த நிலையில் பில்லில் 45 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு நாங்கள் மொத்தமாக வாங்குவதால் அதற்கு என தனியாக ஜிஎஸ்டி கட்டுகிறோம் ஆகையால் கூடுதலாக 5 ரூபாய்க்கு விற்கிறோம் என்றும் இதுவரை யாரும் கேள்வி கேட்டதில்லை நீங்களே கேட்கிறீர்கள் என கூறி இருக்கிறார்
மொத்தமாக வாங்கும்போது சலுகை விலைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் நிலையில் அதற்கு தனியாக ஜிஎஸ்டி கட்டுவதாக கூறி இருப்பது வெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
மேலும் அவர் வாங்கிய அனைத்து பொருளுக்கும் சேர்த்து மாநிலம் மற்றும் மத்திய அரசு வரி இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வசூல் செய்யப்பட்டது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது