மதுரையில் இன்று காலை மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் முயற்சியில் ஏழ்மை நிலையில் உள்ள தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிலதிபர் ஞான சிகாமணி பங்கேற்று 100க்கும் மேற்பட்ட தழுவம் மாற்றுத்திறனாளர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான தழுவம் மாற்றுத்திறனாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.