போலி நகைகளை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி

69பார்த்தது
போலி நகைகளை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி
சேலம் மாவட்டம், சங்ககிரி கஸ்தூரிப்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (38). இவா் அடகுவைக்கப்பட்ட நகைகளை மீட்டு, அவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.

இதுதொடா்பாக இணையதளத்திலும் விளம்பரம் செய்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இவரது கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட மதுரை கோவலன் நகரைச் சோ்ந்த போஸ் மகன் யோகராஜ் (28), தனது நகைகளை மதுரை கோச்சடையில் உள்ள அடகுக்கடையில் அடகு வைத்திருப்பதாகவும், அவற்றை மீட்க உதவினால் அதை ரமேஷிடமே விற்பதாகவும் கூறினாா். இதை நம்பிய ரமேஷ், செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வந்து யோகராஜை தொடா்புகொண்டாா்.

அப்போது, அவா் கோச்சடைக்கு ரமேஷை வரச் செய்து அவரிடம் இருந்த ரூ. 10 லட்சத்தை பெற்றுக் கொண்டு நகையை திருப்பி வருவதாகக் கூறிச் சென்றாா். சிறிது நேரம் கழித்து வந்த யோகராஜ் நகைககள் அடங்கிய பையை ரமேஷிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டாா். பிறகு நகையை ரமேஷ் பரிசோதித்தபோது அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அடகுக் கடைக்கு சென்று விசாரித்தபோது அங்கு நகைகள் எதுவும் அடகு வைக்கப்பட வில்லை என்பதும், ரமேஷிடம் ரூ. 10 லட்சத்தை யோகராஜ் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் எஸ். எஸ். காலனி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி ரமேஷை கைது செய்து ரூ. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி