அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - இபிஎஸ்

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைநகரில், காவல்நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் மாவட்ட எஸ்.பி.யிடம் தொலைபேசியிலும் நேரிலும் வலியுறுத்தினார், ஆனால் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை' என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி