நாதக வேட்பாளர் அபிநயா வேட்புமனு தாக்கல்!

53பார்த்தது
நாதக வேட்பாளர் அபிநயா வேட்புமனு தாக்கல்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் அபிநயா இன்று (ஜுன் 20) வேட்புமனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டியில் இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாகன பேரணியாக வருகை தந்தனர். அவருடன் திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர் அபிநயா வருகை தந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நாதக தலைமை நிர்வாகிகளான பாக்கியராசன், ஜெகதீச பாண்டியன், இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக, தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ளது.
Job Suitcase

Jobs near you