டி. எம் நகர், வண்டியூர் கண்மாய் பகுதியில் அமைச்சர் ஆய்வு

64பார்த்தது
மதுரை மாநகராட்சி டி. எம் நகர், லேக் ஏரியா, டி. டி. சி நகர் மற்றும் வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தெரிவித்ததாவது
எதிர்பாராத புயலின் காரணமாக மதுரை வடபகுதி, செல்லூர் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் டி. எம் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது.


உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டப்பட்டது. தற்போது மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டுமென்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாளை மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால் வண்டியூர் கண்மாயில் அதிக அளவு நீர் வரத்து இருந்தாலும், வெளியேறும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதகுகள் அனைத்தும் தூக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி