ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி தொடர்பான வழக்கு

83பார்த்தது
துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'கும்பகோணத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேசன், சுவாமிநாதன், அவரது நண்பர்கள் ரகு ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருவதாகவும், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் எனது மனைவியிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் நிறுவனத்தில் நிதி முதலீடு செய்தால் இரு மடங்காக திரும்ப தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி எனது மனைவி ரூ 10 கோடி முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டபோது கூடுதலாக ரூ. 1 கோடியை பெற்றனர். அதற்கு பதிலாக அவர்கள் அளித்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

எனவே மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, '2023-ம் ஆண்டு சொத்துகளை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த சொத்துகளை இந்த வழக்கில் இணைப்பதற்க்கு அரசுக்கு குறிப்பாணை அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களில் செய்ய வேண்டும்' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி