lமதுரை மாநகர் ஆத்திகுளம் பழனிச்சாமிநகர் பகுதியை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் தனது காரை நேற்று மதுரை ஆத்திகுளம் சந்திப்பு பகுதியில் நிறுத்தியுள்ளார.
பாஜக பிரமுகரான ராம் பிரசாத் தனது காரை சாலையோரத்தில் நிறுத்திசென்று அருகிலுள்ள டீ கடையில் டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது திடிரென ராம்பிரசாத்தின் மகேந்திரா XUV காரின் இன்ஜின் பகுதியில் புகை வெளியேறதொடங்கி தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதனால் கார் இன்ஜினில் மளமளவென தீ பரவியதையடுத்து அருகில் இருந்த கடைகளில் இருந்து அவசரமாக குடத்தில் உள்ள தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
பின்னா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் காரில் எறிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஆத்திகுளம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் திடீரென பாஜக பிரமுகரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.