சொத்து பிரச்சனையில்
வாலிபருக்கு பீர் பாட்டில் அடி - மற்றொரு வாலிபர் கைது
மதுரை , செல்லூர் சுயராஜ்யபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விவேக் 31. செல்லூர் பந்தல்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் முத்துக்குமார் 19. இவர்களுக்குள் சொத்து பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், நரிமேடு பி. டி. ராஜன் ரோட்டில் சென்று
கொண்டிருந்த விவேக்கை , முத்துக்குமாரரும் அதே பகுதியை சேர்ந்த, பாண்டி மகன் சௌந்தர் என்ற சௌந்தரபாண்டி 32. ஆகிய இருவரும் வழிமறித்து ஆபாசமாக பேசினார். அவர்கள் கீழே கிடந்த பீர்பாட்டில் எடுத்து சரமாரியாக விவேக்கை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து, விவேக், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.
சௌந்தர் என்ற சௌந்தரபாண்டியை தேடி வருகின்றனர்.