மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே திடீர் தீ விபத்து

78பார்த்தது
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே தொழிற்பேட்டையின் உப மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோ. புதூர் பகுதியில் உள்ள சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மின்வாரிய உப மின் நிலையம் முன்பாக தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக இன்று மாலை திடீரென தீ பற்றிய நிலையில் தீயானது அடுத்தடுத்து பரவ தொடங்கியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருந்த மரங்களில் தீ பரவ தொடங்கியது வானுயுற அளவில் புகை மூட்டம் வெளியேறிய நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்று நுரையை தெளித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி