வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சியினர்

66பார்த்தது
வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சியினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ. உசி திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்.,5) அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ. உ. சி. யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் நகர செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில் வ உ சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி