குறைதீர் கூட்டத்தில் கோரிக்கையை வைத்த உசிலம்பட்டி விவசாயிகள்

65பார்த்தது
குறைதீர் கூட்டத்தில் கோரிக்கையை வைத்த உசிலம்பட்டி விவசாயிகள்
மதுரையில் நேற்று (ஜூன் 21) மாவட்டஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது நமது சங்கத்தின் சார்பாக கீழ்க் கண்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

1. முதல் கோரிக்கையான கால்வாய் மேம்பாட்டுநிதி உடனடியாக பெற்று வேலைகள் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தனர். (இதில் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு 25 கால்வாய்களை சீரமைக்க ரூ. 116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளார்)
2. லிங்கப்பநாயக்கனூர் பகுதியில் 58 கிராம பாசன கால்வாயில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாலம் அமைக்க கிராமத்தினர்கள் கோரிக்கையை சங்கத்தின் சார்பாக முன்வைத்தோம். அதில் நபார்டு நிதியின் மூலம் கட்டஏற்பாடு செய்வதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். மேலும் நேரில்பார்வையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
3. லிங்கப்பநாயக்கனூர் புதுக்குளம் வழியாக சிந்தலைக்குண்டு. பாப்பான்குளம். சின்னகுளம், போடுவார்பட்டி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லவேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனையும் துறைமூலம் முயற்சி செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி