சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில், பால்வளத் துறையில் அனைத்து ஒன்றியங்களும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அகவிலைப்படியை 46%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ESI மற்றும் PF பிடித்தம் தவிர்த்து வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும். ஆவின் செலவினங்கள் 15% வரை குறைந்துள்ளது” என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.