“பாஜக மாதம் ரூ.80 கோடி வசூலிக்கிறது” - திருச்சி சூர்யா

7560பார்த்தது
“பாஜக மாதம் ரூ.80 கோடி வசூலிக்கிறது” - திருச்சி சூர்யா
தமிழ்நாடு பாஜகவில் இருந்து சமீபத்தில் இரண்டாவது முறையாக திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து மாதம் 50 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை பாஜகவினர் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் பெறுபவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி