கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

76பார்த்தது
கோயம்புத்தூர் பாஜக அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால், அவர் வருவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்த பாஜகவினரை அனுமதி இன்றி போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோவையிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24*7