சோழவந்தானில் கதைகள் கூறி வாக்குகள் சேகரித்த லியோனி.

83பார்த்தது
சோழவந்தானில் கதைகள் கூறி வாக்குகள் சேகரித்த லியோனி.
மதுரை அருகே சோழவந்தான் பகுதிகளில் தேனி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பில் லியோனி தேர்தல் பரப்புரை செய்தார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ. லியோனி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசிய லியோனி நகைச்சுவையாக கதைகளுடன் பேசி வாக்குகளை சேகரித்தார்.

இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன் மாறன், பால ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத்தலைவர்கள் பால்பாண்டியன், லதா கண்ணன், கார்த்திக், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி