மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மணியன்ஜி தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கர் (70) என்பவர், தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சங்கர் தனியாக வசித்து, தச்சு வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்கள் வீட்டில் இருப்பினும் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று, சங்கர் ஆசாரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, சங்கர் ஆசாரி இறந்து கிடந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கர் ஆசாரியின் இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.