மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம்

78பார்த்தது
மதுரை -  பெங்களூரு வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம்
மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20ஆம் தேதி முதல் வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (ஜூன் 17) நடக்க உள்ளது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திருச்சி, சேலம் வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்குச் செல்கிறது. பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் இரவு 9.25 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இதற்கான கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி