ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினத்தை கொண்டாடும் வகையில், அருங்காட்சியங்கள் துறை சார்பாக ரீல்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வரலாறு, கட்டிடக் கலை, அரசு அருங்காட்சியத்தின் அழகியல் உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி ரீல்ஸ் வெளியிட வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசு 7 ஆயிரத்து 500 ரூபாயும், மூன்றாவது பரிசு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.