மாநில தேர்தலின்போது தங்கை மீதான அன்பு நிரம்பி வழிகிறது என சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியால சுலே, அஜித் பவாரை கிண்டல் அடித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர், "மக்களவை தேர்தலின்போது அன்பான சகோதரியை நினைவில் கொள்ளவில்லை. மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலின்போது அன்பு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. சொந்தம் மற்றும் தொழில் ஆகியவற்றை சகோதரரால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.