மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம்

60பார்த்தது
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம்
மக்களவைத் தேர்தல் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) நடைபெற்றுவரும் சூழலில், மதியம் 1 மணி நிலவரப்படி அவற்றில் மொத்தமாக 39.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 54.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 31.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாம் 46.31%,,பிகார் 33.80%, சத்தீஸ்கர் 53.09%, ஜம்மு - காஷ்மீர் 42.88%, ,கேரளா 39.26%, ம.பி 38.96%, , மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, உ.பி 35.73%, மேற்கு வங்கம் 47.29% என்ற அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி