3.5 ஓவரில் 7 விக்கெட் 0 ரன்.. அசத்தல் சாதனை

82பார்த்தது
3.5 ஓவரில் 7 விக்கெட் 0 ரன்.. அசத்தல் சாதனை
பாலி பேஷ் சர்வதேச மகளிர் டி20 தொடரில் முதல் பேட்டிங் செய்த இந்தோனேசிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து. 152 வெற்றி இலக்குடன் களமிறங்கிய மங்கோலிய அணி 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 11வது ஓவர் வீச அறிமுக வீராங்கனை ரோமாலியா வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். அதே ஓவரில் மேலும் 2 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து 13 மற்றும் 15-வது ஓவரில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17-வது ஓவரில் 1 விக்கெட் வீழ்த்த 127 ரங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியா வெற்றி பெற்றது. 3.5 ஓவர்கள் வீசி, ரன்கள் கொடுக்காமல் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார் ரோமாலியா.

தொடர்புடைய செய்தி