மக்களவை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

81பார்த்தது
மக்களவை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
2024 மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஜுன் 01) நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 13, பஞ்சாப்பில் 12, பீகாரில் 8, மேற்குவங்கத்தில் 9, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 3, சண்டிகரில் 1 என மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத் போன்ற பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று (மே 30) மாலையே அரசியல் கட்சிகளின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை முடிந்தது.

தொடர்புடைய செய்தி