தேனியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

51பார்த்தது
தேனியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
தேனியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் 19 வயது பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மணி தூண்டுதலில் அவரது நண்பர்கள் பழனி, நவநீத், சுரேந்தர், ஹரி ஆகியோர் இந்த கொடூரத்தை செய்து, வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.