பெங்களூருவில் பிரஜ்வல் ரேவண்ணா அதிரடி கைது

64பார்த்தது
300க்கும் அதிகமான பெண்களை ஆசைக்கு இணங்க வைத்து 3,000 ஆபாச வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் ஜேடிஎஸ் கட்சி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த ஹாசன் தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்திறங்கியவரை விமான நிலையத்தில் வைத்து எஸ்ஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இன்று (மே 31) நள்ளிரவு ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தடைந்த பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்ஐடி அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 35 நாட்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல், இன்று நடைபெறும் எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜராவதற்காக ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார்.

நன்றி வீடியோ: ANI

தொடர்புடைய செய்தி