உத்தரவை மீறி மது விற்பனை: பாமக வேட்பாளர் போராட்டம்

68பார்த்தது
உத்தரவை மீறி மது விற்பனை: பாமக வேட்பாளர் போராட்டம்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று பைபாஸ் சாலையில் அவர் பிரச்சாரம் செய்த போது தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான கூட்டத்திற்குள் நுழைந்து அங்கு கள்ளத்தனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த விற்பனையை தடுத்து நிறுத்தினார். மேலும் அனுமதி இல்லாமல் செயல்பட்ட மதுபான கூடத்தின் வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி