விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சாதி ரீதியாக X தளத்தில் அவதூறான பதிவுகளை பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி சந்தரப்பிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கனடாவில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து இழிவாக பதிவிட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இலங்கையை சேர்ந்த செல்வ காந்தனின் மனைவி போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் கனடா சென்றுள்ளது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.