பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் - அறிவித்தது திமுக

52பார்த்தது
பாசிசம் வீழட்டும்  இந்தியா வெல்லட்டும் - அறிவித்தது திமுக
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளுக்கு 'வார் ரூம்' அமைத்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.மேலும் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக கூட்டங்கள் நடைபெறும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி